கருப்பு, வெள்ளை பூஞ்சையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை நோய்... கடும் பீதியில் மக்கள்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக மஞ்சள் பூஞ்சை நோய் தோன்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களை கடுமையாக தாக்கி வருகின்றது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்.
தமிழகத்திலேயே சுமார் 50 பேர் வரை கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோயை கவனிக்காமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்தாகும் என்றும் இதுகுறித்து அறிகுறி தெரிந்தததும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கருப்பு வெள்ளை பூஞ்சை தொற்று நோயாகவும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை அடுத்து மஞ்சள் பூஞ்சை ஒன்று புதிதாக தோன்றியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.
மேலும் இந்த மஞ்சள் பூஞ்சை பயங்கரமானது என்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகின்றது.
கொரோனா தொற்று ஒருபுறம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து நோய்கள், வந்துகொண்டிருப்பதால் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.