இரவு நேரத்தில் ஆண்களை அனுப்பி சீரியல் நடிகை செய்த அதிர்ச்சி செயல்! போலீசாரிடம் கதறிய இளம்பெண்; அதிர்ச்சி சம்பவம்
பாஜகவில் உறுப்பினராக இருக்கும் பிரபல நடிகை ஜெயலட்சுமிக்கு எதிராக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நபர் ஒருவர் கந்து வட்டி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் நடித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் பாஜகவில் பொறுப்பு வகித்து வருகிறார். இதனையடுத்து, சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 9 பேருக்கு வங்கியில் பெற்றதாக கூறி, கடன் தொகை வழங்கியதாக அதில் தெரிவித்துள்ளார்.
தற்போது கடனுக்கு ஈடான தொகையை கட்டிய பின்னரும், வட்டி மட்டுமே கொடுத்ததாகவும் அசல் பணத்தை தர வேண்டும் எனவும் ஜெயலட்சுமி உள்பட சிலர் மிரட்டுவதாக கூறியுள்ளார்.
மேலும், வங்கியில் கடன் வாங்கித் தராமல் கந்து வட்டிக்கு ஜெயலட்சுமி வாங்கி கொடுத்தது தெரிய வந்துள்ளதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.