ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த விசித்திர விலங்கு: உடம்பு முழுக்க இருந்த மாற்றம்
நாகாலாந்தில் காடு ஒன்றில் கண்டறியப்பட்ட விசித்திர விலங்கு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
வனவிலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிட காட்டுக்குள் கமெராக்கள் வைப்பதை வழக்கமாக அதிகாரிகள் கொண்டுள்ளனர்.
இந்தியாவிலும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட அடர்ந்த காட்டு பகுதிகளில் பல இடங்களில் வனத்துறை அதிகாரிகள் மூலம் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கேமராக்களில் அவ்வப்போது சில விசித்திரமான விலங்குகள் சிக்குவதும் வழக்கமாகி வருகிறது.
நாகலாந்தில் விசித்திர சிறுத்தை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது. 3700 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலையில் காட்டுப்பகுதியில் மரம் ஒன்றுக்கு அருகே இந்த சிறுத்தை தனியாக நின்று உள்ளது.
குறித்த சிறுத்தை இதுவரை யாரும் கண்டிராத வகை என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர். காரணம் இதன் உடலில் இருக்கும் மேகம் போன்ற வித்தியாசமான புள்ளிகள். இந்திய சிறுத்தைகளில் இப்படி புள்ளிகளை பார்க்கவே முடியாது.
இந்தியாவில் அதிகபட்சம் 4-5 சிறுத்தைகள் மட்டுமே இப்படி இருக்கிறது. அந்த 4 -5 சிறுத்தைகளும் கூட ஒரே குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுத்தை Neofelis nebulosa வகையை சேர்ந்தது என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் உயரம் குறைந்தது மட்டுமின்றி மரம் ஏறக்கூடிய திறன் கொண்டும் காணப்படுகின்றதாம்.

