இந்த உணவுகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடாதீங்க! ஆபத்தாம்
கசப்பான சுவையைக் கொண்ட பாகற்காய் உடலுக்கு தேவையான பல நன்மைகளை அளிப்பதுடன் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கின்றது.
மேலும் உயர் ரத்தம் அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு கட்டுக்குள் வைத்திருப்பதுடன், ரத்தம் சுத்திகரிக்கவும், வயிறு தொடர்பான பிரச்சினை போக்கவும் உதவி செய்கினற்து.
பாகற்காயில் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் கொலஸ்ட்ரால் சதவீதம் மிகவும் குறைவு என்பதால், வைட்டமின் பி6, இரும்பு, பாஸ்பரஸ், பாந்தோனிக் அமிலம், தியாமின் மற்றும் ரெபோஃப்ளேவின் ஆகியவை நிறைந்துள்ளன.
எந்த உணவுடன் சாப்பிடக்கூடாது?
பாகற்காய் உணவுகளை சாப்பிட்டுவிட்டு பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வயிற்றி பிரச்சினை, வயிறு வலி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகின்றது.
அதே போன்று பாகற்காயுடன் வெண்டக்காயும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவையும் செரிமான உறுப்பினை பாதிக்கும்.
மாம்பழத்தை சாப்பிட்ட பின்பு பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதுவும் ஒவ்வாமையை ஏற்படுத்தி வாந்தி, எரிச்சல், குமட்டலையும் ஏற்படுத்துகின்றது.
முள்ளங்கி மற்றும் தயிர் இவற்றினை சாப்பிட பின்பு பாகற்காயை எடுத்துக் கொள்ளாதீர்கள்... தோலில் பிரச்சினை ஏற்படுத்துடன், அமிலத்தன்மை பிரச்சியையும் ஏற்படுத்தும்.