கசப்பே இல்லாமல் பாகற்காய் சுக்கா... இப்படி செய்தால் குழந்தைகளே சாப்பிடுவாங்க
பொதுவாக பாகற்காய் அனைத்து காலகட்டதிலும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு மலிவான காய்கறியாக காணப்படுகின்றது.
பாகற்காயை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால் கபம், பித்தம், குஷ்டம், மந்தம் ஆகிய கொடிய நோய்களுக்கு தீர்வு கிடைப்பதுடன் இதில் வைட்டமின் சி செரிந்து காணப்படுவதால் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.
பாகற்காய் இலைச்சாற்றுடன் சிறிது வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் குடற்புழுக்கள் எளிமையாக வெளியேறிவிடும். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உணவுப்பையிலுள்ள பூச்சிகளையும் அழிக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை பிரச்சினைக்கு பாகற்காய் சிறந்த தீர்வு கொடுக்கும். மேலும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும்.
இன்சுலின் சமநிலையை குணப்படுத்தவும் உடலில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தவும் பாகற்காய் அருமருந்தாக காணப்படுகின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை பொரும்பாலானவர்கள் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்புத்தன்மை தான். கசப்பு சுவை கொஞ்சமும் இல்லாமல் அசத்தல் சுவையில் பாகற்காய் சுக்கா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் - 500 கிராம்
எண்ணெய் - 4 தே.கரண்டி
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4-5
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
சாம்பார் தூள் - 1 தே.கரண்டி
நாட்டு சர்க்கரை - 1/2தே.கரண்டி
செய்முறை
முதலில் பாகற்காயை சுத்தம் செய்து நறுக்கி, நீரில் போட்டு, அதனுடன் 1/4 தே.கரண்டி அளவு மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரதட்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பூண்டு பற்களை தட்டிப் போட்டு, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ஊற வைத்துள்ள பாகற்காயையும் வடிகட்டி சேர்த்து 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
நன்றாக வெந்ததும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், சாம்பார் தூள் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு, அளவான தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு நன்கு சுருண்டு வரும் வரை வேக வைத்து இறக்கினால், அவ்வளவு தான் அட்டகாசமான சுசையில் ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் சுக்கா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |