வழுக்கையிலும் முடி வளர இதை தடவுங்க.... 3 வாரத்திற்குள் இழந்த முடி மீண்டும் கிடைக்கும்!
யாருக்கு தான் முடி கொட்டுற பிரச்சினை இல்லை.
முடி உதிர்வதால் மன உளைச்சல் ஒரு பக்கம், உடல் நல குறைபாடு ஒரு பக்கம், இப்படி எல்லா பக்கத்திலும் வேதனையே நமக்கு கிடைக்கிறது.
இப்படிப்பட்ட மோசமான பிரச்சினையில் இருந்து விடுபட நம் முன்னோர்களின் வழி உள்ளது.
அதுவும் கொத்தமல்லி இலையை வைத்தே நம்மால் இழந்த முடியை மீண்டும் பெற முடியும்.
கொத்தமல்லி
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இந்த கொத்தமல்லியில் உள்ளது. உடல் நலத்திற்கு எப்படி இது உதவுகிறதோ அதே போன்று முடியின் ஆரோக்கியத்திற்கும் கொத்தமல்லி சிறப்பாக பயன்படுகிறது.
கொத்தமல்லி எண்ணெய்
தயாரிக்க தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி 1 கைப்பிடி
- ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
தயாரிப்பு
முறை முதலில் கொத்தமல்லியை அரைத்து கொள்ளவும்.
அதன்பின் இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொண்டு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முடியின் வேரில் தடவி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும். அதன்பின் தலைக்கு குளிக்கலாம்.
இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தாலே வழுக்கையில் மீண்டும் முடி வளரும்.