ஆரோக்கியத்தை அள்ளி தரும் பாகற்காய் பொரியல்... கசப்பே இல்லாமல் எப்படி செய்வது?
பொதுவாகவே பாகற்காய் என்றதுமே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான்.
ஆனால் பாகற்காய்கசப்பாக இருந்தாலும் பல்வேறு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க துணைப்புரிவதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகின்றது.
குறிப்பான குழந்தைகளுக்கு பாகற்காய் கொடுப்பதால், குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பாகற்காயை கொஞ்சடும் கசப்புத்தன்மை இல்லாமல் அசத்தல் சுவையில் எவ்வாறு பொரியல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய்- 100 கிராம்
சிறியவெங்காயம்-100 கிராம்
பச்சை மிளகாய்- 1
தேங்காய் துருவல்- சிறிதளவு
உப்பு- தேவைக்கேற்ப
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடியளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை
முதலில் பாகற்காயை நன்றாக கழுவி வட்ட வட்டமாக நறுக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சிறிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பாகற்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் உப்பு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி, பாகற்காயை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
ஆரம்பத்திலேயே பாகற்காய் நன்றாக வதங்கி இருப்பதனால் சீக்கிரம் வெந்துவிடும் இரண்டு தடவை மூடியை திறந்து கிளறி விட்டு தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், இவ்வளவு தான் கசப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாத பாகற்காய் பொரியல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |