சுகரை ஏற விடாமல் தடுக்கும் பாகற்காய் கூட்டு! இப்படியும் செய்யலாமாம்
காய்கறி வகைளில் பல நோய்களுக்கு மருந்தாக சாப்பிடக் கூடிய காய்கறி தான் இந்த பாகற்காய்.
பொதுவாக பாகற்காயில் அதிகமான கசப்பு தன்மை இருப்பதால் சிலர் இதனை விரும்ப மாட்டார்கள். மேலும் சக்கரை நோயாளர்கள் இந்த காயை சாப்பிடுவார்கள்.
இந்த காய் சக்கரையின அளவை கட்டுப்படுத்தும். இதிலிருக்கும் கசப்பு தன்மை காரணமாகவே முக்கியமான நேரங்களில் சமைப்பதற்கு எடுக்கக்கூட விரும்ப மாட்டார்.
மேலும் வீட்டில் விருந்தினர்கள் நிறைந்திருக்கும் போது அவர்களுக்கு உணவு கொடுக்க பாகற்காய் சமைக்கக்கூடாது என்ற ஐதீகமே இருக்கிறது.
அந்த வகையில் சர்க்கரை நோயாளர்களுக்கு உதவியாக இருக்கும் பாகற்காய் கூட்டு எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 1
பாகற்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
பருப்பு - 1/2 கோப்பை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 மேசைக்கரண்டி
உளுந்து - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி

தயாரிப்பு முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையானளவு எண்ணெய் விட்டு, அது சூடானதும் பாகற்காய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து பருப்பை நன்றாக சுத்தம் செய்து விட்டு, அதனை பாகற்காய் வதக்கலையும் போட்டு தேவையானளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
பருப்பு நன்றாக வேக வேண்டும். இதனால் அடுப்பை மிதமான வெப்பநிலையில் வைக்க வேண்டும். பருப்பு வெந்தவுடன், அதனை நன்றாக கரண்டியால் மசித்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் உப்பு, புளிச்சாறு, வெல்லம், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
தற்போது குழம்பு ஒரு கெட்டியான தன்மையில் இருக்கும் சுமார் 15 நிமிடங்களுக்கு முடி வைக்க வேண்டும். வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில், எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதங்க விடவும்.
வதங்கியதும் அதனை பாகற்காய் கூட்டுடன் ஊற்றி இறக்கினால் சுவையான பாகற்காய் கூட்டு தயார்!
