வெள்ளநீரில் மிதக்கும் பிரியாணி அண்டா! யாருக்கு கிடைக்க போகுதோ?
ஹைதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளநீரில் பிரியாணி அண்டா மிதக்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
வெள்ளத்தில் மிதந்த பிரியாணி அண்டா
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் தென்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
சிறிய மழை பெய்தாலும் இந்திய நகரங்களில் தண்ணீர் தேங்கிவிடும் என்ற சூழலில் ஹைதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளம் நிறைந்த தெருக்களின் பல விரும்பத்தகாத பொருட்கள் மிதப்பதற்கு மத்தியில், ஒரு பிரியாணி அண்டா மிதக்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

வைரல் காட்சி
இரண்டு பிரியாணி அண்டாக்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு, தண்ணீர் தேங்கிய தெருவில் மிதப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.
பின்னணியில், அடிபா ஹோட்டல் என்ற பிரியாணி கடை ஒன்றை காணமுடிகிறது. அந்த உணவகத்தின் பிரியாணி அண்டாக்கள் தான் வெள்ளநீரில் மிதப்பதாக கூறப்படுகிறது.
இதுக்குறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த பயணர், யாரோ ஒருவர் தனது பிரியாணி ஆர்டரைப் பெறாததற்காக கவலையடைய போகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Somebody is going to be unhappy for not getting his biryani order.#Hyderabad #HyderabadRains pic.twitter.com/OPdXsjSoKs
— Ibn Crowley (@IbnFaraybi) July 28, 2022