நீங்கள் பிறந்த மாதம் என்ன? எப்படிபட்டவர்கள் தெரியுமா?
12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்புண்டு.
இந்த மாதம் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று கூறுமளவுக்கு மாதம் நமது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இப்போது எந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்கின்றது என்று பார்ப்போம்.
ஜனவரி
இந்த மாதங்களில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாக காணப்படுவார்கள். மருத்துவத் துறை இந்த மாதங்களில் பிறந்தவர்களுக்கு ஒத்துவராது. இந்த இரண்டு மாதங்களிலும் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறந்த ஆராய்ச்சியாளராக வருவார்கள்.
பெப்ரவரி
விளையாட்டு மற்றும் சினிமா துறைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும். கற்பனைத் திறன் கூடுதலாகக் காணப்படும்.
மார்ச்
ஒருவருக்கும் பணிந்து போகமாட்டார்கள். கல்வியில் சிறந்தவர்களாக இருப்பர். நிர்வாகம், மருத்துவம் போன்ற தொழில்கள் பொருத்தமாக இருக்கும்.
ஏப்ரல்
நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பர். சொந்தமாக தொழில் செய்வது சிறந்தது. மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மே
தனிமையை அதிகமாக விரும்புவார்கள். அரசியல், நீதிபதி, பொதுப்பணித்துறையில் பணியாற்றக் கூடியவர்கள்.
ஜூன்
ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகம். ஜூலை வெறுப்பு, அவசரம் போன்ற குணங்கள் கொண்டவர்களாக இருப்பர். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.
ஒகஸ்ட்
தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள். எதையும் தாமதமாகவே செய்து முடிப்பார்கள். நண்பர்கள் வட்டம் மிகவும் சிறியதாக இருக்கும்.
செப்டெம்பர்
எந்தவொரு விடயத்திலும் வெற்றி பெறுவார்கள். கல்வியில் சிறந்தவர்கள். அரிதான காரியங்களை செய்யக் கூடியவர்கள். வியாபாரம், நீதித்துறை போன்றவற்றில் சிறப்பான பலன் கிடைக்கும்.
ஒக்டோபர்
நினைத்ததை முடிப்பார்கள். மற்றவர்களை குறை கூறுதல், பழித்தல் போன்ற செயல்களை செய்யக் கூடியவர்கள். தங்களது துறைகளில் புகழ் பெறுவார்கள்.
நவம்பர்
உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் யோசித்து செய்வார்கள். விட்டுக்கொடுக்கும் மனமுடையவர்கள். நேர்மறையாக எதையும் சிந்திப்பார்கள்.
டிசம்பர்
தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பர். கவனக் குறைவாக செயல்படுவார்கள். எதார்த்தமாக யோசிக்கும் குணம் கொண்டவர்கள்.