Bipolar Disorder symptoms : எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக உடல் நல பிரச்சினைகளில் எவ்வளவு கவனம் செலுத்துகின்றோமோ அதே அளவிலான கவனத்தை மன ஆரோக்கியத்திலும் செலுத்த வேண்டும்.
இன்று எமது சமூகத்தில் இருக்கும் பலர் மனநல குறைபாடுகளால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். ஆனால் இதற்கான சிகிச்சைகள் எதிலும் அவ்வளவாக கவனம் செலுத்துவது இல்லை.
அப்படி பலரை வாட்டி வதைக்கும் முக்கிய மனநல பிரச்சினைகளில் ஒன்று தான் “பைபோலார்” இதனை ஆங்கிலத்தில் bipolar disorder என அழைக்கிறார்கள். இந்த நோய்க்கான அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை என்பவற்றை தெரிந்து உரிய தீர்மானம் எடுக்காவிட்டால் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
தற்போது இருக்கும் அவசர உலகில் அதிகமான உடல் உபாதைகளுக்கு முகங் கொடுக்கிறோம். இதனால் மன அழுத்தம் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனின் நாம் வீட்டில் அமர்ந்து ஓய்வெடுக்கும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.
உடலை சேதப்படுத்தும் கிருமிகள் மன அழுத்தமும் கட்டாயம் சிகிச்சை பெற வேண்டிய ஒன்று.
அந்த வகையில், மன அழுத்தம் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பைபோலார் டிஸ்ஆர்டர்
மன அழுத்தம் பிரச்சினையில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் மேனிக் டிப்ரஷன். இது ஒரு மனிதனின் மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றமாகும்.இந்த பாதிப்புள்ளவர்கள் அவசியம் சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிட்டால் நோயின் தீவிரத்தை காணலாம்.
மேனிக் டிப்ரஷன் என அழைப்படுவது காலப்போக்கில் “பைபோலார் டிஸ்ஆர்டர்” என அழைக்கப்பட்ட ஆரம்பித்தது.இந்த நோயின் தாக்கத்தை தமிழில் இருமுனைக்கோளாறு எனவும் கூறுவார்கள்.
இதனை சிக்கலான மன நல பாதிப்பு என்று கூறுவார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையின்மை, சோர்வு, துன்பம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும். இதுவே காலப்போக்கில் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் என லண்டன் மன நல மையம் கூறுகிறது.
பைபோலார் டிஸ்ஆர்டரின் அறிகுறிகள்
பைபோலார் டிஸ்ஆர்டர் பாதிப்பு உள்ளது என்பதனை ஒரு சில அறிகுறிகள் வைத்து கூறலாம்.
- எந்தவித காரணமும் இல்லாமல் தூக்கமின்மை ஏற்படும். ஏதாவது ஒரு சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும்.
- ஒரு விடயத்தை சிறப்பாக செய்ய முடியாது. அதில் ஏகப்பட்ட கவனச்சிதறல் ஏற்படும்.
- சிலர் எப்போதும் அளவுக்கு அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அதிகமாக பேசுவதற்கு இந்த நோயின் பாதிப்பும் ஒன்றாக இருக்கலாம்.
- எந்தவொரு விடயத்திலும் சரியாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் ஏகப்பட்ட சிக்கல்களை அவர்கள் சந்திக்கலாம்.
- பைபோலார் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னுள் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அதனை மறுத்து தான் நன்றாக தான் இருக்கிறோம் என எண்ணிக் கொள்ள முயற்சிப்பார்கள்.
- சில நேரங்களில் அதிக எனர்ஜி கொண்டவர்களாக தெரிவார்கள்.
- குதிப்பது போல் உணர்வு ஏற்படும்.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களிடம் இருப்பது போன்று உணர்ந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது. இதனை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் அவர்களின் வாழ்க்கை திசை மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது.
யாருக்கு உண்டாகலாம்?
இருமுனைக்கோளாறு பாதிப்பு யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். அதிலும் குறிப்பிட்ட 20 வயதை கடந்தவர்களுக்கு அதிகமாக கண்டறியப்பட்டு வருகின்றது. நபருக்கு நபர் அறிகுறிகள் மாறுப்பட்டு காணப்படும். சில அறிகுறிகள் காலப்போக்கில் தீவிரமடைந்து அவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அதி மனச்சோர்வு கொண்டவர்கள் வெளிகாட்டும் அறிகுறிகள்
1. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை, பள்ளி, சமூக நடவடிக்கைகள் அல்லது உறவுகள் உள்ளிட்ட சந்தர்ப்பங்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிரச்சினை வரும், இல்லாவிட்டால் இவர்களாக பிரச்சினையை தேடிக் கொள்வார்கள்.
2. எப்போதும் சோகமாக இருப்பார்கள்.
3. எந்தவிதமான காரணமும் இன்றி திடீரென அழுக ஆரம்பித்து விடுவார்கள். இவர்களின் கண்ணீருக்கு பின்னால் காரணம் எதுவும் இருக்காது.
4. அனைத்து செயல்பாடுகளிலும் ஆர்வமின்மை அல்லது இன்பம் இல்லாததாக நிலை ஏற்படும்.
5. உணவு கட்டுப்பாடு இல்லாத போது இவர்கள் எடை இழப்பு, எடை அதிகரிப்பு அல்லது பசியின்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குழந்தைகளாக இருப்பவர்களுக்கு எடை அதிகரிப்பு ஏற்படலாம்.
6. இருமுனைக்கோளாறுக்கு ஆளானவர்கள் தூக்கமின்மை, அதிக தூக்கம் மெதுவான நடத்தை சோர்வு அல்லது ஆற்றல் இழப்பு, பயனற்ற தன்மை அதிகப்படியான அல்லது பொருத்தமற்ற குற்ற உணர்வு , சிந்திக்கும் திறன் குறைதல் அல்லது கவனம் செலுத்துதல், முடிவெடுக்க முடியாத தன்மை, தற்கொலை பற்றி யோசிப்பது, திட்டமிடுவது போன்ற எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
சிகிச்சை அளிப்பது எப்படி?
- இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநோய் மருத்துவர் ஒருவர் முழுமையாக சோதனை நடத்துவார்.
- நோயாளி பராமரித்து வைத்திருக்கும் மனநல குறிப்புகள் இந்த நோயை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு சிகிச்சை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
- உளவியல் அறிகுறிகளை வைத்து இருமுனையப் பிறழ்வை உறுதி செய்ய சில மனநல ஆய்வுகள் உள்ளன.
- மற்ற பிரச்சனைகளை கண்டறிய உடல் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனையையும் மருத்துவர் மேற்கொள்வர்.
- மனச்சோர்வு மருந்து (antidepressant) மற்றும் ஆன்டிசைகோடிக் மருந்துகள் இதற்குத் தரப்படும்.
- சிகிச்சை வழிமுறைகளில் ஒருவரின் அன்றாட தூக்கம் மற்றும் உணவு பழக்கங்களை கண்காணிப்பது அவசியம்.
- தெரிவு மருத்துவம் மூலம் மனநல மருத்துவர் நோயாளியிடம் அவர்களின் எண்ணங்கள் மூலம் எப்படி அவர்கள் செயலை கட்டுப்படுத்துவது என்பது பற்றி பேசுவார்.
- எப்போதும் கூர்ந்து கவனிப்பது மூலம் கட்டுக்குள் கொண்டு வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |