Bipin Rawat; ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் மனைவி எப்படிப்பட்டவர் தெரியுமா?
கடந்த நாட்களுக்கு முன் குன்னூர் அருகே ராணவ ஹெலிகாப்டர் வெடித்து 13 பேர் பரிதாப உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது,.
இதனிடையே பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் மற்றும் அவரது குடும்ப பின்னணி ஒரு சுவாரசிய தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்தோல் மாவட்டத்தில் உள்ள சோஹாக்பூர் சமஸ்தானத்தின் மகள் தான் பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா.
இவர், தந்தை குன்வர் மிருகேந்திர சிங் சோஹாக்பூர் கர்ஹியின் உள்ளூர் எழுத்தராக இருந்தார். கோட்மா சட்டமன்ற தொகுதியில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஆனால், தற்போது அவர் இல்லை. சி.டி.எஸ் விபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் ஷாஹ்டோலைச் சேர்ந்தவர். அவரது ஆரம்பக் கல்வி ஷாஹ்டோலில் துவங்கினார். அதன் பிறகு குவாலியரில் உள்ள சிந்தியா பெண்கள் பள்ளியில் பயின்று வந்தார்.,
பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பட்டம் பெற்றார். விபின் ராவத் கேப்டனாக இருந்தபோது 1986-ல் விபின் ராவத்தை திருமணம் செய்து கொண்டார் மதுலிகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்,.
மூத்த மகள் கிருத்திகா ராவத், இளைய மகள் தாரணி ராவத். மதுலிகா ராவத்துக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மேலும், கணவரை இழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள், புற்றுநோயாளிகள், ஊனமுற்ற குழந்தைகளுக்களுக்கு உதவி செய்யும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதேபோல் மதுலிகா ராவத் ராணுவ அதிகாரிகள் மனைவிகள் நல சங்கத்தின் தலைவராக இருந்தார்.