தனுஷின் ரீல் தங்கை ஊறுகாய் வியாபாரியா?
நடிகர் தனுஷின் ரீல் தங்கை ஸ்ரீதேவி இரவில் ஊறுக்காய் மற்றும் மசாலா பொடி விற்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “புதுபேட்டை” முதல் “சரவணன்” வரை தங்கை நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
இவர் வெள்ளித்திரையில் போதியளவு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் “ராஜா ராணி” சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரள வைத்திருப்பார்.
இதனை தொடர்ந்து தற்போது “மோதலும் காதலும்” மற்றும் “பொன்னி” ஆகிய சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
ஊறுகாய் கம்பெனி
இந்த நிலையில் இவர் சொந்தமா ஊறுக்காய் மற்றும் மசாலா பொடி விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சின்னத்திரையில் அதிகம் படித்திருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என கூறப்படுகின்றது.
அத்துடன் தன்னுடைய அம்மாவின் ஆசைக்கான தான் இது போன்ற வேலைகளை செய்து வருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ தனுஷின் தங்கைக்கு இப்படியொரு நிலையா?” என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |