விருந்து வைத்து தடல் புடலாக நடந்த தவளை திருமணம் -எதுக்கு தெரியுமா?
வெயில் தணிந்து மழை வர வேண்டும் என வேண்டி இந்தியாவில் கிடா விருந்து வைத்து இரு தவளைகளுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
தவளை திருமணம்
தொடர்த்து அதிகரித்து வரும் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை வரும் என்ற ஐதீகத்தை வைத்து தற்போது கோலாகலமாக திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
கோவையில் மழை வர வேண்டும் என வேண்டி பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி ஒரு மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கு நடக்கும் திருமணம் போல இரு தவளைகளுக்கு மேள தாளத்துடன் திருமணம் நடத்தி வைக்கிறார்கள்.
இத்திருமணம் குரும்பாளையம் மருதவிநாயகர் கோயிலில் இரு தவளைகளையும் ஊர்வலமாக அழைத்து வந்து சடங்குகளும் செய்து இறுதியில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மேலும், திருமணம் முடிந்து இந்த இரு தவளைகளும் குடும்பம் நடத்துவதற்காக கிணற்றில் விடப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவில் பல இடங்களில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை ஒரு வழிபாடாக செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாது இதுபோன்ற தவளை திருமணம் 12 ஆண்டுகளுக்கு முன் நடத்தி வைக்கப்பட்டதாகவும் அதன் பின் மழை பெய்ததாகவும் சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |