அன்று தண்ணீருக்கு பயப்பட்ட குழந்தை இன்று நீச்சல் வீராங்கனை இதற்கு பின்னணி காரணம் என்ன?
இந்தியாவின் 14 வயது நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு பற்றிய முழு விபரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தினிதி தேசிங்கு
தினிதி தேசிங்கு சிறுவயதான 3 வயதில் இருந்து பேசுவதில் தாமதம் காணப்பட்டதால் அவள் மற்றவர்களிடததில் அணுக வெட்கப்பட்டாள். இதனால் இவரின் பெற்றோர்கள் இவளை விளையாட்டில் ஆர்வப்படுத்தி நண்பர்களுடன் சேர்த்துவிட யோசித்தனர்.
இதற்காக தான் தங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் குளத்தில் நீச்சல் கற்பிக்கலாம் என ஆரம்மித்தனர். ஆனோல் தினிதி தேசிங்குவிற்கு தண்ணீர் என்றால் பயம்.“ எனக்கு தண்ணீர் பிடிக்கவில்லை, நான் உள்ளே செல்ல விரும்பவில்லை.
குளத்திற்குள் என் கால்களை எடுத்து வைக்க முடியவில்லை, என் தலையை குளத்திலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. அது ஒரு போராட்டம்” என்று தினிதி கூறுகிறார்.
இதன்போது இவருக்கு ஆறுவயதாக இருக்கிறது.ஆனால் பெற்றோர்கள் விடவில்லை வீட்டின் அருகே இருந்கும் குளத்தில் இறக்கி நீச்சல் கற்பித்தனர். இப்படி செய்ய செய்ய நாளைவில் அவளுக்கு தண்ணீரில் இருந்த பயம் போகிறது.
தண்ணீரின் அழுத்தம் நோய் இதை எல்லாம் தாண்டி தனக்கு எட்டு வயதாக இருக்கும் போது மங்களூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஓபன் மீட் போட்டியில் கலந்து கொள்கிறார். இது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைகிறது.
தினிதி தேசிங்குவின் தாய்க்கு அவளை நாம் வீணானதிற்கு திணிக்கின்றோமோ என நினைத்தாலும் அவளுக்கு நீச்சலில் திறமை உள்ளது என்பதில் உறுதியாக இருந்தார்.
இதனால் அவளுக்கு வந்த எல்லா தடைகளும் நீங்கியது. நோய்களும் வராமல் போனது. இதன் பின்னர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற இளம் பெண் நீச்சல் வீரர் என்ற பெருமையை தினிதி பெற்றுள்ளார்.
இதை தவிர இவர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் தேசிய சாதனை படைத்துள்ளார். மேலும், 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இத்தனைக்கும் பின்னர் இப்போது 14 வயது நிரம்பியிக்கும் தினிதி தேசிங்கு இந்தியாவின் நீச்சல் வீராங்கனையாவார். இந்த விஷயங்களை இவர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |