நாட்டிலே நடந்த மிகப்பெரிய திருட்டு! கண்டுபிடிச்சா தொழிலதிபரின் மகள் கொடுக்கும் சன்மானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
காணாமல் போன நகையை கண்டுபிடித்து கொடுத்தால் 57 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருக்கும் தகலவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த பெர்னி எக்லெஸ்டோன் பார்முலா என்பவர் பார்முலா 1 என்ற கார் பந்தயங்களை நடத்தி வருகிறார். இவரின் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இதனிடையே, மகள் தமரா எக்லெஸ்டோன் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் தனது கணவருடன் லண்டனில் இருந்து பின்லாந்துக்கு சென்றிருந்தார்.

247 கோடி நகை திருட்டு
அந்த நாளில், லண்டனின் கென்சிங்டன் அரண்மனை தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்திருக்கிறார்கள். வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையிலும் இருந்த விலை உயர்ந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கின்றனர்.
பின் அளிக்கப்பட்ட புகாரில், இங்கிலாந்தில் நடந்த மிகப்பெரிய திருட்டில் ஒன்றாக கருதப்படுகிறது. தமராவின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 247 கோடி ரூபாய் ஆகும்.
காணாமல்போன தனது நகைகள் மீண்டும் கிடைக்கும் என ஆண்டுக்கணக்கில் தமரா காத்திருந்திருக்கிறார். ஆனால், இதுவரையில் ஒரு ஜோடி தோடுகள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன்மானம் 57 கோடி
இந்நிலையில், இதுகுறித்து அவர் பேசுகையில், “காணாமல்போன எனது நகைகளை நான் மீண்டும் பார்க்க முடியாது என்ற உண்மையை நான் உணர்ந்தே இருக்கிறேன்”. ஆனால், அவற்றுள் எங்களது குடும்பத்தின் பாரம்பரிய பொருட்கள் இருக்கின்றன.
அவற்றின் பண மதிப்பை விட அவை எனக்கு மதிப்பு மிக்கவை” என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, தனது நகைகளை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானமாக 25 சதவீதத்தை (57.45 கோடி ரூபாய்) சன்மானமாக அளிக்க இருப்பதாக தமரா அறிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, இந்த திருட்டில் சந்தேக நபராக கருதப்படும் டேனியல் வுகோவிச்சை லண்டன் காவல்துறையிடம் ஒப்படைப்பவர்களுக்கு 2.3 கோடி ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் எனவும் தமரா அறிவித்திருக்கிறார்.