கதற கதற ஊழியர்களை தாக்கி பல லட்சத்தை கொள்ளையடித்து ஓடிய திருடர்கள் - அதிர்ச்சி சம்பவம்!
கடைக்குள் புகுந்து கடைக்காரரை அடித்து மூகமூடி கொள்ளையடிர்கள் பல லட்சத்தைச் அள்ளிக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல லட்சத்தை கொள்ளையடித்து ஓடிய திருடர்கள்
பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில், கடந்த செவ்வாய்கிழமை மதியம், முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் ஒரு கடைக்குள் நுழைந்தனர்.
அப்போது, கடையில் இருந்த 2 ஊழியர்களை கொடூரமாக தாக்கினர். ஊழியர்கள் கதறி அழுது, கெஞ்சிக் கேட்டும், திருடர்கள் கடைசியில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினர்.
தற்போது இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக முழு சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வெளியாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.