செருப்பால் அடித்து, தரையில் உருண்டு தாக்கிக் கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் - மாணவர்கள் அதிர்ச்சி!
பீகாரில் செருப்பால் அடித்து, தரையில் உருண்டு தாக்கிக் கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பயங்கரமாக தாக்கிக் கொண்ட ஆசிரியர்கள்
அன்றாடம் நம்மை சுற்றி ஏதாவது ஒரு நிகழ்வு நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. மாமியார், மருமகள் சண்டை பார்த்திருக்கிறோம். நண்பர்கள் சண்டையையும் பார்த்திருக்கிறோம். ஆனால், பீகார் அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்குள் பயங்கர சண்டை வெடித்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் அரசு பள்ளி ஒன்று இயங்கிக்கொண்டு வருகிறது. இந்த அரசுப் பள்ளியில் ஆசிரியையும், தலைமை ஆசிரியரும் மோதிக் கொண்டுள்ளனர்.
இருவரும் முதலில் செருப்பால் அடித்துக் கொண்டும், தரையில் உருண்டு, கடுமையாக உதைத்துக் கொண்டனர். மேலும், ஒருவரையொருவர் முடியை இழுத்துக் கொண்டு சண்டைபோட்டுக் கொண்டனர். இதைப் பார்த்த பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி மாணவர்களுக்கு எதிரில் நடந்து கொண்டால் எப்படி... இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.