பிக்பாஸ் வனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்
பிக்பாஸ் நடிகை வனிதா புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1995ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படம் மூலம் பிரபமானவர் நடிகை வனிதா, தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் திருமணமாகி செட்டிலானார்.
2 முறை திருமணமாகி விவாகரத்தில் முடிய, சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் பல சர்ச்சைகளை கிளப்பினாலும், சில மாதங்களில் அவரை விட்டும் பிரிந்து வாழ்கிறார்.
இந்நிலையில் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.
படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாகவும், ஆடம் தாசன் என்பவர் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.