பிக்பாஸ் தாமரையின் கணவர் எங்கு வேலை பார்க்கிறார் தெரியுமா? லீக்கான தகவல்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற தாமரை செல்வி தெருக்கூத்து கலைஞர்., புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
தாமரைக்கு பல்வேறு வகையிலும் சக ஹவுஸ்மேட்ஸ் உதவி வருகின்றனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த தாமரை ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இவருக்கு ஒரு மகனும் உள்ளனர். அண்மையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் கணவர் வந்திருந்தார். பல விஷயங்களை போட்டியாளர்களிடம் அப்போது பகிர்ந்திருந்தார்.
கடந்த நாளில், ஜூலி 2-வது திருமணம் ஆகியும் கழுத்தில் தாலி அணியாதது ஏன் என கேட்க, அதற்கு பதில் அளித்த தாமரை. நாங்க கவரிங் நகை போட்டு தான் திருமணம் செய்து கொண்டோம். கவரிங் எனக்கு செட்டாகவில்லை அதனால் கழட்டி விட்டேன் என கூறினார்.
வீட்டை விட்டு வெளியே போன பிறகுதான் செயின் வாங்கி அணிய வேண்டும் என உருக்கமாக பேசினார். இந்நிலையில், தாமரை செல்வியின் கணவர் வேலை பார்க்கும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
துணிக்கடை ஒன்றில் சேல்ஸ் பிரிவில் வேலை பார்த்து வருகிறார் பார்த்த சாரதி.
இதனைக்கண்ட நெட்டிசன்கள் தாமரை செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் இனி மாறும் என தெரிவித்து வருகின்றனர்.