தந்தை இறந்த சோகம் கூட இல்லாமல் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் தாமரை! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் ரசிகர்கள்
தந்தை இறந்த சோகம் கூட இல்லாமல் மல்லிப்பூ பாடலுக்கு குத்தாட்டம் போடும் தாமரையின் வீடியோக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் தாமரை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக்பாஸ் ” போட்டியில் பங்கேற்று பிரபலமாகியவர் தான் தாமரை.
இவர் தெருக்கூத்து கலைஞராக இந்த போட்டியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் வீட்டிற்கு வர முன்னர் அப்படியென்றால் என்னவென்று கூட அவருக்கு தெரியாதாம்.
தாமரையின் யதார்த்தமான பேச்சினாலும், செயலினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களைக் கவர்ந்து தன்வசப்படுத்தினார்.

தந்தை இறந்த சோகத்தில் வெளியான டான்ஸ் வீடியோ
இந்த நிலையில் இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சார்ந்த தாமரை பிக்பாஸ் வந்த போது ஒரு 10 நாட்கள் கூட இருக்க மாட்டார் என நினைத்தவர்கள் முகத்தில் கரிய பூசினார்.
சுமார் 90 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து மாஸ் காட்டினார். இப்படியொரு நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் டாப் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரின் தந்தையார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தாமரையின் இந்த நடன வீடியோக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.