பிக்பாஸ் நடிகை இறப்பில் வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள் - இறப்பின் பின்னணி என்ன?
இந்தி பிக்பாஸ் 14 வது நிகழ்ச்சியின் மூலம் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான நடிகை சோனாலி போகத் (42).
அரியானாவைச் சேர்ந்த இவர், பிரபல நடிகையும் பாஜக தலைவரும் ஆவார். கடந்த 22ம் தேதி இவர் மாரடைப்பு மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
கோவாவுக்கு சுற்றுலா சென்ற இவர், மர்மமாக மரணம் அடைந்துள்ளார் என அவரது குடும்பத்தினர்கள் குற்றம்சாட்டினர். இதன் பின்னர் கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குடும்பத்தினர் ஒப்புதலுக்கு பின், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மாரடைப்பு மரணமா?
இதில், நடிகை சோனாலி போகத்தின் உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகித்து, அவர்கள் மீது குடும்பத்தினர்கள் புகார் அளித்துள்ளனர்.

இருவர் கைது
இதனால், சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், சோனாலி 22ம் தேதியன்று கர்லீஸ் இரவு விடுதியில் பார்ட்டியில் பங்கேற்றபோது அவருடன் இருந்த சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் சிங் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், இரவு விடுதியில் வைத்து தண்ணீரில் தீங்கு விளைவிக்கும் பொருளை கலந்து, சோனாலிக்கு கட்டாயப்படுத்தி கொடுத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

வெளியான சிசிடிவி காட்சி
மேலும், சோனாலி போகத் இரவு விடுதியில் இருந்து வெளியே செல்லும் வழியில் தடுமாறிக் கொண்டிருந்த வீடியோ பதிவை நேற்று போலீசார் வெளியிட்டனர்.
இந்த வழக்கில் புதிய ஆதாரமாக மற்றொரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சோனாலி போகத் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, நடன அரங்கில் அவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைப்பதாக அந்த காட்சி அமைந்துள்ளது.
இந்த வீடியோவில் உள்ள நபர், கைது செய்யப்பட்ட சுதிர் சங்வான் போன்று தெரிகிறது. ஒரு நாள் முன்பு வெளிவந்த வீடியோ பதிவில் கிளப்பில் இருந்து சோனாலி போகத் வெளியேற அவர் உதவியது தெரியவந்துள்ளது.
A new video clip has surfaced on social media that purportedly shows #BJP leader and actor #SonaliPhogat, who died on August 23 a day after arrival in #Goa, being forced to drink on a dance floor
— Hindustan Times (@htTweets) August 27, 2022
Full story: https://t.co/v1WaC2Uc9z pic.twitter.com/GV7EhFOoh7