வாய் பேச முடியாத அம்மாவிடம் நடுரோட்டில் பிக்பாஸ் ஷிவின்! என்ன சொன்னார் தெரியுமா?
வாய் பேச முடியாத ஒரு அம்மாவிடம் பிக்பாஸ் சிவின் கணேஷன் பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டைட்டில் வின்னரால் எழும் சர்ச்சைகள்
பிக் பாஸ் சீசன் 6 மிகவும் சிறப்பாக நடந்து முடிந்த நிலையிலும் அதன் தாக்கம் இன்றும் வெளியில் இருந்து வருகிறது.
இதனால் மக்கள் பிக் பாஸ் சீசன் 7 எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் சீசன் 6ல் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆரம்பத்தில் 20 இருந்த நிலையில் நடுவில் புதிய என்ட்ரியாக மைனா நந்தனி சேர்த்து கொள்ளப்பட்டார். இந்த சீசனில் ஆரம்பத்திலேயே ஜிபி முத்து அவர்கள் வெளியேறி விட்டார்.
இதனால் இந்த சீசன் பெரியதாக இருக்காது என ரசிகர்கள் முனுமுனுத்த நிலையில் இதில் அசீம், சிவின், தனலெட்சுமி ஆகிய போட்டியாளர்கள் சுமார் 106 நாட்கள் இழுத்து சென்றார்கள். மேலும் தனலெட்சுமியை சிலர் “ஆம்பள அசீம்” என்று கூட நக்கலாக பேசி வந்தார்கள்.
இந்நிலையில் சமீபக்காலமாக பிக் பாஸ் சீசன் 6 “டைட்டில் வின்னராக” அசீம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் பல விமர்சனங்கள் மற்றும் சண்டைகள் என பல பிரச்சினைகள் வைரலாகி வருகிறது.
இதற்கு அசீம் தரப்பில் யாரும் இல்லாததால் தனலெட்சுமி அவர்கள், அசீமிற்கு துணையாக இருந்து பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
சிவினுக்கு குவியும் பேன்ஸ் கூட்டம்
இது ஒருபுறம் இருக்கையில் பிக் பாஸ் சீசன் 6 மூன்றாம் இடத்தை பிடித்து கொண்டதுடன் பாரதி கண்ணம்மா சீரியில் ஒரு மாஸ் என்றி கொடுத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து சிவின் சீரியல்களில் நடிப்பார் என ரசிகர்கள் பக்கம் கூறிவரும் நிலையில், பல சமூக பணிகளில் சிவின் அவர்கள் கலந்து கொண்டு வருகிறார். இவருக்கு அம்மா இல்லை என்றும் அந்த அன்பிற்காக தான் ஏங்குவதாகவும், சிவின் ஒரு இடத்தில் கூறி அழுதிருப்பார்.
ஆனால் இவர் வெளியேறிய பின்னர் அம்மாக்கள் குவிந்து மகிழ்ச்சி கண்ணீரில் சிவினை நனைய வைத்துள்ளார்கள். இதனை தொடர்ந்து வாய் பேச முடியாத ஒரு பெண்ணிடம் சிவின் கஷ்டப்பட்டு பேசிக் கொண்டிருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சியை சிவினின் ரசிகர் ஒருவர் அவருடைய டுவிட்டர் பக்கத்தில்,“ஷிவினுடன் என்ன சொல்ல முயற்சிக்கிறாள் என்பதை அறிய நான் மிகவும் விரும்பினேன். காதல் வெறும் பேரின்பம் மற்றும் அழகானது” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
“சிவினுக்கு இப்படியும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதா? ”என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
I badly wanted to knw what she was trying to convey with #shivin.
— Jon drenched in snow (@DrenchedSnow) February 13, 2023
Love is just Bliss and Beautiful.?
Thanks @Shivinganesan for sharing this happenings.?✨#ShivinSupremacy #shivinganesan #BiggBossTamil6 pic.twitter.com/XVzp3QnsAz