பிரபல நடிகை ஷாக்சிக்கு திருமணம்? அவரே கொடுத்த விளக்கம்
பிக்பாஸ் புகழ் பிரபல நடிகையான ஷாக்சிக்கு திருமணம் நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அது போட்டோஷீட்டுக்காக எடுக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால், தினந்தோறும் போட்டோ ஷீட் புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
இவரது பதிவுகளுக்கே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது, அந்த அளவுக்கு செம வைரலாகி விடும்.
சமீபத்தில் கூட ஊடரங்கு காலத்திலும் கூட செம பிட்டாக இருப்பது எப்படி என வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே உடற்பயிற்சிகளை செய்து காட்டி, அது தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில் கழுத்து மஞ்சள் நிற தாலியுடன் புடவையில் மணப்பெண்ணாக ஜொலிக்கும் புகைப்படத்தை சாக்ஷி வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், திருமணம் முடிந்துவிட்டதா? Happy Married Life என வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தனக்கு திருமணமாகவில்லை என்றும், அது போட்டோஷீட்டுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
