அன்று ரஜினிக்கு ஜுஸ் கொடுத்த குழந்தை யார் தெரியுமா? இந்த பிரபலத்தின் மகள் தானாம்
நடிகை ரேகா ரஜினிக்கு தனது மகள் ஜுஸ் கொடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை ரேகா.
இந்த நிகழ்ச்சியில் ரேகா கலந்துகொண்டது பலருக்கும் கமல் - ரேகா இணைந்து நடித்த திரைப்படங்களை குறிப்பாக புன்னகை மன்னன் படத்தை நினைவூட்டியது.
பின்பு ரேகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு உணவுகளை சமைத்தார்.
இந்நிலையில் தன் மகள் வழங்கிய ஜூஸை ரஜினி பருகியதும், மீண்டும் அந்த ஜூஸை தன் குட்டி மகளுக்கே ரஜினி கொடுப்பதுவுமான புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மேலும் நடிகை ரேகா, “புகைப்படமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த தருணத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு ரஜினிஃபைடு 2கே கிட்ஸ்க்கு நன்றி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தனது 9 மணிநேர உண்ணாவிரதத்தை காவிரி பிரச்சனை சூழலில் முடித்தபோது, என் மகள் கொடுத்த ஒரு கிளாஸ் ஜூஸைப் பருகினார்.
அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகவும், ஒரு நல்ல காரணத்தின் ஒரு பகுதியாகவும் அவள் ஆசீர்வதிக்கப்பட்டாள்.” என குறிப்பிட்டுள்ளார்.