Bigg Boss: இந்த சீசனை ஆண்ட அரசி! ரெட் கார்டுடன் வெளியேறிய பாருவின் வைரல் பதிவு
பிக்பாஸ் சீசன் 9 தொடர்பாக இதுவரையில் வெளியான 320 ப்ரோமோக்களில் 220 ப்ரோமோக்கள் பார்வதி சம்பந்தமாக இருந்துள்ளதால், அவர் இந்த சீசனை ஆண்ட அரசி என்றும், அவர் தான் உண்மையான வெற்றியாளர் எனவும் குறிப்பிட்டிருந்த ரீல்ஸை VJ பார்வதி தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளமை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்டியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீகன் 9 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் பார்வதி, கம்ருதின் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதனை பிக்பாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் சாண்ட்ராவை காரில் இருந்து தள்ளிவிட்டமை மற்றும் கெட்ட வார்த்ததைகள் பேசியமை ஆகிய விடயங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருந்தது.
[I9H3DS ]
இதனால் ரசிகர்கள் பார்வதி, கம்ருதினுக்கு ரெட் கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே விஜய் சேதுபதி அதிரடியாக இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.

ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால், 90 நாட்கள் உள்ளே இருந்து விளையாடிய இருவருக்கும், நிகழ்ச்சி சார்பில் எந்தவொரு பரிசும், AV காணொளியும், மேடையில் வரவேற்பும் வழங்கப்பட மாட்டாது எனவும் இவர்கள் இருவரும் இத்தனை நாட்கள் விளையாடியதற்கு சம்பளமும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 9 தொடர்பாக இதுவரையில் வெளியான 320 ப்ரோமோக்களில் 220 ப்ரோமோக்கள் பார்வதி சம்பந்தமாக இருந்துள்ளதால், அவர் இந்த சீசனை ஆண்ட அரசி என்றும், அவர் தான் உண்மையான வெற்றியாளர் எனவும் குறிப்பிட்டிருந்த ரீல்ஸை VJ பார்வதி தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த விடயம் இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பிவருகின்றது.