உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்திருப்பேன்... அப்பவே வனிதாவிற்கு ரூட்டு விட்ட பிரதீப்: வைரலாகும் வீடியோ காட்சி
தற்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பிரதீப் தன் ஆசையை வனிதாவிடம் வெளிப்படுத்திய வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதில், அனன்யா, பாவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
வனிதா - பிரதீப் வைரல் வீடியோ
தற்போது பிக்பாஸ் வீட்டில் பிரதீப் அண்டனிக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அவரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், “உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகாம இருந்து நீங்க சின்ன பொண்ணா இருந்திருந்தா நான் நிச்சயமாக உங்களை காதலித்திருப்பேன்” என பிரதீப் வனிதாவிடம் கூறியிருப்பார்.
இந்த வீடியோ பிக்பாஸ் சீசன் 3யில் கவின் போட்டியாளராக கலந்துக் கொண்டிருந்தார். அப்போது கவினின் நண்பனாக வந்து போது தான் அவர் இதனை பேசிவிட்டு இறுதியாக கவினை ஓங்கி அறைந்து விட்டு போனார்.
Rare Video :#Pradeep & #Vanitha Mam Funny Conversation In BiggBoss Season 3 😀😀#BiggBossTamil7 #BiggBossTamil #biggboss7tamil #Jovika @vanithavijayku1 pic.twitter.com/Ym42gc7AmE
— JOVIKA ARMY (@JovikaFC) October 25, 2023
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |