இந்த லாஸ்லியா தான் எங்களுக்கு வேணும்: பழைய தோற்றத்தில் வெளியிட்ட புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான லாஸ்லியா மரியநேசன் தற்போது பட வாய்ப்புக்காக படும் மோசமாக கவர்ச்சிக்கு மாறி பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் சுடிதாரில் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.
பிக்பாஸ் லாஸ்லியா
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த கவினுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சிலகாலம் கவினுடன் பேசாமல் இருந்துவந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு முதன் முதலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதற்குப் பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்த கூகுள் குட்டப்பா என்றப் படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் உடன் ஜோடியாக நடித்திருந்தார்.
பழைய தோற்றத்தில் லாஸ்லியா
படவாய்ப்புகள் குறைந்ததால் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த லாஸ்லியா சட்டென உடல் எடையை குறைத்து உடைகளின் அளவையும் நாளுக்கு நாள் குறைத்து கவர்ச்சி காட்டத் தொடங்கி விட்டார்.
இந்நிலையில், லாஸ்லியா கவர்ச்சி ஆடைகளுக்கு பதிலாக சுடிதார் அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இவரின் இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பலரும் இந்த லொஸ்லியாவைத் தான் எதிர்ப்பார்த்தோம் என இத்தனை நாள் லாஸ்லியாவைத் திட்டித் தீர்த்தவர்கள் திடீரென ஆதரவான கமெண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |