கையில் விருதுடன் பிக்பாஸ் ஜூலியா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க!
கடந்த 2017ம் ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ் பெற்றவர் ஜூலி.
இதன் மூலம் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த நல்ல பெயரை அவர் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
ஓவியாவுடனான பிரச்சனையால் பெரும்பாலான ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் ஜூலி.
ஆனால் அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் சீசன் 5 முடிந்த கையோடு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கான தொடக்கத்திலேயே 'ஓட்டுனதும் போதும், ஒழிஞ்சதும் போதும் , இனி எல்லாரையும் ஓட விடறேன், இனி எல்லாருக்கும் குறும்படம் போட வைக்கிறேன்' என்று கூறுவதாக ஜூலி அறிமுகமானார்.
அவர் சொன்னபடியே இதன் மூலம் மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்தார் ஜூலி, அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.

டிரெண்டிங் போட்டியாளர்
அல்டிமேட் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளராக நிச்சயம் ஜூலி வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், எலிமினேட் செய்யப்பட்டார்.
ஜூலி தான் உண்மையான வெற்றியாளர் என அவருக்கு ஆதரவாக குரல்களும் எழுந்தன.
இந்நிலையில் thegoldencrownawards வழங்கிய "THE TRENDING PLAYER OF BIGG BOSS ULTIMATE TAMIL" என்ற விருதை பெற்றுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்