90 ஸ் நடிகையாக மாறிய இலங்கை பெண்! மெய்சிலிர்க்க வைக்கும் அழகிய புகைப்படங்கள்
பழைய காலத்து நடிகையாக மாறிய இலங்கை பெண் ஜனனியின் புகைப்படங்கள் இணையத்தில வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.
இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபல்யமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது.
இதனை தொடர்ந்து சில நாட்களில் பின்னர் குறைந்த வாக்குகளை பெற்ற காரணத்தினால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
வைரலாகும் புகைப்படங்கள்
இந்த நிலையில் ஜனனி தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் 90 ஸ் நடிகை போல் தன்னை அலங்காரம் செய்து கொண்டு புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ எப்படி பார்த்தாலும் ஜனனி அழகு தான்..90 களில் இவர் இருந்திருந்தால் 90ஸ் நடிகைகளுக்கு டப் கொடுத்திருப்பார்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.