நம்ம ஜனனியா இது? மேக்கப் லுக்கில் தென்னிந்திய நடிகைகளை தெறிக்க விட்ட பிக்பாஸ் பிரபலம்!
இலங்கை பெண் ஜனனி மேக்கப்பில் தென்னிந்திய நடிகைகளை தெறிக்கவிடும் அளவில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
மீடியா பயணம்
இலங்கையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் தான் ஜனனி. இவருக்கு தற்போது 22 வயது ஆகின்றது.
மேலும் இலங்கையில் தனியார் மீடியாவில் சாதாரண தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இவர் இலங்கையில் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் செய்து வந்தார்.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 ற்கு முக்கிய போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட ஜனனி தற்போது விஜயுடன் லியோ படத்தில் நடிக்கும் அளவிற்கு பிரபல்யமடைந்து விட்டார்.
ஆளை மயக்கும் அந்தவொரு புகைப்படம்
இந்த நிலையில் ஜனனி தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஆல்பம் பாடல் என பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரின் புகைப்படங்கள் நாளுக்கு நாள் வித்தியாசம் வித்தியாசமாக இருக்கின்றன.
அந்த வகையில் புதிய புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தென்னிந்திய நடிகைகளை விட அழகாக இருக்கிறார்.
ஜனனி காலப்போக்கில் தென்னிந்திய நடிகைகளுக்கு டப் கொடுப்பார் என ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.