குட்டி நயனாக மாறிய ஜனனி: வெட்கப் புன்னகையுடன் வெளியிட்ட வீடியோ
விஸ்வாசம் நயன் போல் களமிறங்கிய இலங்கை பெண் ஜனனியின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
முக்கிய போட்டியாளராக களமிறங்கிய பிரபலம்
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.
இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபல்யமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது.
பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது சினிமா படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சினிமா, ஆல்பம் பாடல் ஷீட்டிங் ஆகியவற்றில் பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் விஸ்வாசம் பாடலுக்கு நயன் போல் ரீல்ஸ் செய்துள்ளார்.
இந்த கெட்டப்பில் பார்க்கும் போது ஜனனி நயன்தாராவையே ஓடர்டேக் செய்வார் போல் இருக்கின்றது.

இந்த காட்சியை ஜனனியின் ரசிகர்கள் முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் என வைரலாக்கி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து ஜனனியின் வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள்,“ வரவர உங்களின் அழகு அதிகரித்து கொண்டே செல்கின்றது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.