நம்ம ஜனனியா இது? ரீல்ஸ்க்காக கெட்டப் மாறிய ஆச்சரியம் - குழப்பத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் ஜனனி பார்ப்பதற்கு அப்படியே இஸ்லாமிய பெண் போல் மாறியுள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 இருந்து வெளியேற காரணம்
இலங்கையை பிறப்பிடமாக கொண்டு மீடியாத்துறை மீது கொண்டுள்ள தீவிர ஆசை காரணமாக பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இவரின் ஆரம்பத்தில் இந்தியாவிற்கு செல்லும் முன்னர் இவருக்கு என ஒரு தனி ஆர்மி இலங்கை மக்கள் உருவாக்கியிருந்தார்கள்.
இவர் தான் டைட்டில் அடிப்பார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் இவரின் சில நடவடிக்கையால் பாதியில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.
அசல் இஸ்லாமியராக மாறிய ஜனனி
தினமும் இணையத்தை துறந்தால் கண்டிப்பாக ஜனனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கலாம்.
அந்த வகையில் வெள்ளை நிற ஆடை அணிந்து அசல் இஸ்லாமிய பெண் போல் ரீல்ஸ் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதனை பார்த்த ஜனனி ரசிகர்கள், நீங்க யாராவது இஸ்லாமியரை காதலிக்கிறீர்களா? என குழப்பத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
மேலும் திடீரென இப்படியொரு பதிவை ஜனனி வெளியிட்டதற்கு என்ன காரணம் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் மூலம் கேட்டு வருகிறார்கள்.