Weight loss: 13 கிலோ எடையை சட்டுன்னு குறைத்த பிக்பாஸ் பிரபலம்! எப்படின்னு தெரியுமா?
ஹிந்தி பிக்பாஸின் 18வது சீசனில் பங்கேற்ற பிரபல நடிகை ஷில்பா ஷிரோத்கர் நிகழ்ச்சி முடிந்த குறுகிய காலத்தில் 13 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் அண்மை காலமாக இணையத்தில் பெரும்பாலானலவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
13 கிலோ எடை குறைப்பு
ஷில்பா ஷிரோத்கர் தற்போது உடல் எடையை குறைந்து காணப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் உடல் பருமன் காரணமாக தான் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் இவர் பல தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில்,ஷில்பா ஷிரோத்கர் உடல் பருமனுடன் இருந்த புகைப்படத்தையும், தற்போது உடல் எடையை குறைத்த பின்னர் இருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் அவரே பதிவிட்டு இந்த மாற்றத்துக்கு பிக்பாஸ் நிகழ்சி பெரிதும் துணைப்புரிந்தது என பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பெற்ற அனுபவங்கள் மூலம் மூன்னேற்றமடைந்து, பல பாடங்களை கற்று, இந்த மாற்றத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அளவான உணவே கிடைக்கும் என்பதால், அந்த நிகழ்ச்சியும் அவரது உடல் எடை குறைப்புக்கு முதன்மையான காரணமாக அமைந்ததாம்.
பிக்பாஸில் இருந்த காலகட்டத்தில் அவர் சுமார் 11 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இருப்பினும் நிகழ்ச்சி முடிந்து அவர் வெளிவந்ததும் 2 கிலோ எடை மீண்டும் அதிகரித்துவிட்டதாம்.

ஆனால் அதன் பின்னரும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு மொத்தம் 13 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம்.
அவருடன் பிக்பாஸ் சீசன் 18இல் இருந்த சக போட்டியாளர்கள் சிலரின் பெயரையும் குறிப்பிட்டு இவர்கள் தனது உடல் எடை குறைப்பு பயணத்திற்கு ஊக்கமளித்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        