இறந்த பின் காணும் சொர்க்கத்தை!.. குக் வித் கோமாளி தர்ஷா உருக்கம்
கொரோனாவின் 2வது அலையில் சிக்கி இந்தியா திண்டாடி வரும் சூழலில், பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் 2வது வாரமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் சாலையோரம் வசிக்கும் மக்கள் உணவில்லாமல் அல்லப்படும் சூழல் உருவானது.
இவர்களது பசியை போக்க அக்கம்பக்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
குறிப்பாக பிரபல நடிகையும், குக் வித் கோமாளி பிரபலமும் ஆன தர்ஷா குப்தா, தினந்தோறும் ஏழை, எளிய மக்களுக்கு உணவினை வழங்கி வருகிறார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து பாருங்கள், நீங்கள் இறந்தபின் காணும் சொர்க்கத்தை ஒரு நொடிப் பொழுதில் காணமுடியும் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருவதுடன் பலரும் தர்ஷாவுக்கு வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.