தனலட்சுமிக்கு பாகுபலி பட ஆசையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
என்னை பற்றி யாரும் பேச வேண்டாம், என்னை பற்றி யாரும் பேசாவிட்டால் நானும் யாரையும் பற்றி பேசமாட்டேன் என பிக் பாஸ் தனலெட்சுமி சார்பாக ஒரு கருத்தொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பராகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. இதில் சுமார் 21 பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் ஆதரவால் உருவாக்கப்பட்டமையினால் வாக்குகள் அடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான தெரிவுகள் இடம்பெறும். தொடர்ந்து ஒரு போட்டியாளரை வெளியேற்ற வேண்டும் என்றாலும் அதே மக்களின் வாக்குகள் அடிப்படையில் தான் இடம்பெறுகிறது.
இந்த நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்ட தனலெட்சுமி வெளியில் வந்த பின்னர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இவர் வெளியில் வந்தவுடன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அசீம் குறித்து பேசியது எல்லாம் ஒரு பொய்யான கதையாக மாற்றி அசீமிற்கு ஆதரவு வழங்கி வருகிறார்.
பாகுபலி போன்ற படங்களில் நடிப்பேன்
இவரின் இந்த கருத்துக்களை பிக் பாஸ் சீசன் 6 ன் மற்றைய போட்டியாளர்களையும், பிக் பாஸ் ரசிகர்களையும் வியப்படைய வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இவர் பல பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி வழங்கி வருகிறார். அதில், “நான் யாரு பற்றியும் பேசவில்லை. என்னை பற்றியும் பேசாதீங்க. நீங்க பேசாத வரைக்கும் நானும் உங்க வழியில் வரமாட்டேன் என கூறியிருக்கிறார்.
அத்துடன் பாகுபலி போன்ற பிரமாண்ட திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” எனவும் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனலெட்சுமி குறித்து பல விடயங்கள் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “ தனலெட்சுமிக்கு பாகுபலி ஆசையா? என கலாய்த்து வருகிறார்கள்.