பல நாள் கழித்து குட்நியூஸ் உடன் வந்த பிக்பாஸ் தனலெட்சுமி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைக் கோழியாக சுற்றிக் கொண்டிருந்த தனலெட்சுமி தற்போது புது குட்நியூஸ் உடன் வைரலாகி வருகிறார்.
பிக்பாஸ் தனலெட்சுமி
டிக்டாக் செயலி மூலம் மக்களுக்கு பரீட்சயமானவர் தான் தனலட்சுமி. ஆரம்பத்தில் தனது குடும்ப பின்னணி பற்றி நிறையவே பேசியிருப்பார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் சுறுசுறுப்பாகவும் துடிப்பாகவும் விளையாடி அஸீமுடன் சண்டைக்கு நிற்பதில் மும்முரமாக இருந்தார். ஆரம்பத்தில் வீட்டில் இருக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த தனலெட்சுமி அடுத்தடுத்த டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
அதன் பிறகு குறைவாக வாக்குகளால் தனலட்சுமிதான் வெளியேறி அஸீமிற்கு ஆதராவாக இருந்தார்.
குட்நியூஸ்
இந்நிலையில் கொஞ்ச நாட்களாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்த தனலெட்சுமி தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
கியா சோனட் கார் ஒன்றை வாங்கி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்தப் பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், இந்தக் காரின் விலை 10 இலட்சத்திற்கும் அதிகமாக போகும் என்று சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |