பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமி?
பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்த வாரம் தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் சீசன் 6
உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
5 சீசன்களை காட்டிலும் சீசன் 6ல் தொடக்கம் முதலே சண்டை களைகட்டினாலும் போட்டியாளர்கள் பாதுகாப்பாக விளையாடுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
அசிம், தனலட்சுமி, விக்ரமன் மற்றும் ஷிவினை தவிர மற்ற அனைவருமே Safe Game விளையாடுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
தனலட்சுமி வெளியேற்றம்
இதுவரையிலும் பல போட்டியாளர்கள் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறியுள்ள நிலையில் இறுதிக்கட்டத்தை நோக்கி நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என குழப்பம் நீடித்து வந்த நிலையில் தனலட்சுமி வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் வீட்டை பரபரப்பாக கொண்டு செல்லும் போட்டியாளரான தனலட்சுமியை வெளியேற்றினால் சுவாரசியம் குறைந்துவிடுமே என ரசிகர்கள் இப்போதே கமெண்ட் அடிக்க தொடங்கிவிட்டனர்.