பிக்பாஸ் வீட்டில் அசிம், விக்ரமனுக்கு அட்வைஸ் சொன்ன தனலட்சுமி!
பிக்பாஸ் சீசன் 6 தொடக்கம் முதலே களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், 4 வாரத்தை கடந்துள்ளது.
இதுவரையிலும் சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட ஜிபி முத்து, குடும்பத்தை விட்டு இருக்க முடியவில்லை எனக்கூறி தானாகவே வெளியேறினார்.
வாரத்தின் முதல் டாஸ்க்
இந்த வார முதல் டாஸ்கில் Scratch Cardக்கான நேரம் என 1 லிருந்து 10 வரை குறிப்பிடப்பட்ட நம்பர்கள் கொண்ட பலகை உள்ளது.
அதில் தடியை கொண்டு பாலை தள்ளி விட்டு, எந்த எண்ணில் விழுகிறதோ, அந்த எண்ணில் குறிப்பிட்ட டாஸ்கை செய்ய வேண்டும்.
தனலட்சுமியின் அட்வைஸ்
இதில் தனலட்சுமிக்கு, வீட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக அட்வைஸ் வழங்க வேண்டும் என வந்துள்ளது.
உடனே அவர் விக்ரமனுக்கு, ஒருத்தவர்கள் ஒரு விடயத்தை கூறினால் அது அவர்களின் Characterக்கு பேசுகிறார்கள், அதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அசிமுக்கு, நீங்கள் பேச வேண்டும் என்பதற்காக பேசாமல், இரண்டு பக்கமும் கேட்டுவிட்டு பேசினால் நல்லது என தான் நினைப்பதாக கூறியுள்ளார்.
இதுதவிர ராமுக்கும், ஷிவினுக்கு அட்வைஸ் வழங்குவதாகவும் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.