சனம் ஷெட்டியை தள்ளி வைத்த தர்ஷன்.. வேறு பெண்ணுடன் காதலா? - குழப்பத்தில் ரசிகர்கள்
ஒரு பெண் மேல் இப்போதைக்கு காதல் இருக்கிறது என நடிகர் தர்ஷன் ஓபனாகப் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தர்ஷன்
இலங்கையைச் சேர்ந்த தர்ஷன், மாடலாக பிக்பாஸ் மூன்றாவது சீசன் மூலமாகப் பிரபலமடைந்தார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் வைத்து சனம் ஷெட்டி காதலித்து வந்தார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
பிக்பாஸை விட்டு் வெளியேறிய பின்னர், ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் நாயகியாக இலங்கை பிரபலம் லாஸ்லியா நடித்திருந்தார்.
வெளியில் பார்க்கும் பொழுது அண்ணன் - தங்கையாக இருந்தாலும் படத்தில் காதலர்களாக நடித்திருந்தார்கள்.
மறைமுகமான காதல்
இப்படியொரு நிலையில் தற்போது‘நாடு’ என்றப் படத்தில் நடித்துள்ளார். படத்திற்கான பேட்டியொன்றில் தர்ஷனின் காதல் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதில் கொடுத்த தர்ஷன், “ காதல் வாழ்க்கை கொஞ்சம் சுமாராக தான் உள்ளது. எனக்கு ஒரு பெண் மீது க்ரஷ் இருக்கின்றது. ஆனால் இதுவரையில் நான் சொல்லவில்லை.
எல்லோரின் க்ரஷ் ஒரு நாள் காதலாக மாறும் என்பது போல் என்னுடைய க்ரஷ்வும் ஒரு நாள் காதலாக மாறலாம். தற்போது படங்களில் கவனம் செலுத்துகிறேன்..” என உரையை முடித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ சனம் ஷெட்டியின் காதல் வாழ்க்கை என்னாச்சி..” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |