பூ கொடுத்து வரவேற்ற சிறுவனை கண்டுக் கொள்ளாமல் சென்ற அசீம்! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்
பிக்பாஸ் டைட்டில் வின்னரான அசீமிற்கு பூகொடுத்து வரவேற்ற சிறுவனை கண்டுக்கொள்ளாமல் சென்ற வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் கொந்தளித்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் அசீம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகராக இருந்த அசீம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வாகை சூடியினார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு சர்ச்சை இல்லையென்றால் சண்டையோடு தான் ஆரம்பிப்பார்.
ஆனாலும் இவருக்கு வாரம்தோறும் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே வந்து இன்று வெற்றியாளர் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.
மேலும், பிக்பாஸ் இறுதிப்போட்டியில் ஷிவின், விக்ரமன் ஆகிய பிற இரண்டு போட்டியாளர்களும் பிக்பாஸ் பைனலுக்கு தகுதியாகி இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அசீம் பிக்பாஸ் டைட்டிலை வென்றது பலருக்குப் பிடிக்கவில்லை இவரின் வெற்றியையும் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.
சிறுவனைப் புறக்கணித்த அசீம்
இந்நிலையில், அசீம் கடந்தவாரம் மலேசியா நோக்கி பயணமாகியிருந்தார். அங்கு ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு சென்றிருந்த வேளையில் சிறுவன் ஒருவன் அசீமை வரவேற்பதற்காக பூ கொத்து ஒன்றை நீட்டி வரவேற்றிருக்கிறார்.
அந்தச்சிறுவனை அசீம் கண்டுக்கொள்ளவே இல்லை. இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு அவரை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வீடியோவிற்கு கீழ் பல கமெண்டுகள் அசீமை திட்டித்தீர்த்த வண்ணமாகத்தான். மேலும், குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Antha paiyan flower koduka varan nu azeemuku teriathu. nambunga makkale . This is Azeem for you?the one n only makku nayagan.#AbuserAzeem #Azeem #Vikraman #vikraman? #AramVellum #biggboss6tamil @RVikraman pic.twitter.com/rI2RkXhBx8
— Thalapathy Uyir♥️ (@Painfulsoul19) March 11, 2023