பிக்பாஸ் டைட்டிலை தனலட்சுமிக்கு கொடுக்க விரும்புகிறேன்: அண்ணன் தங்கை பாசத்தை கொட்டித் தீர்த்த அசீம்!
தான் பெற்ற பிக்பாஸ் டைட்டிலை என் தங்கை தனலட்சுமிக்கு கொடுக்க விரும்புவதாக அசீம் தெரிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியொன்றில் மக்களின் பெரும் வரவேற்றைப் பெற்று ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியானது கடந்த வருடம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவடைந்திருந்தது.
இதில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் 3 பேர் இறுதிப்போட்டி வரைச் சென்றார்கள். விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய போட்டியாளர்கள் என மூன்று பேர் போட்டியிட்டிருந்தனர்.
இவர் மூவருக்கிடையிலான போட்டியில் ஷிவின் மூன்றாம் இடத்தையும், விக்ரமன் இரண்டாம் இடத்தையும், அசீம் டைட்டில் வின்னராக வெற்றிப்பெற்றிருந்தார்.
சகோதர பாசத்தை கொட்டித்தீர்த்த அசீம்
பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் வெவ்வேறு சேனல்களுக்கு பிரத்தியேகமாக நேர்காணல்களை வழங்கி வருகின்றார்கள்.
இந்நிலையில், பிரத்தியே யூடியூப் சேனல் ஒன்று "மக்களுடன் அசீம்" என்ற நிகழ்ச்சியில் அசீம் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் மக்களுடன் கலந்துக் கொண்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தனலட்சுமிக்காக அசீம் செய்த செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதில், அசீம் வென்ற பிக்பாஸ் டைட்டில் கோப்பையை அசீம் எடுத்து தனலட்சுமி கையில் கொடுத்ததுடன் மட்டுமில்லாமல், "நான் இந்த விருதை ஷேர் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்.
ஏன்னா எல்லா வகையிலும் எனக்கு சமமா ரொம்ப திறம்பட தகுதி படைத்தவர் என் தங்கச்சி" எனக்கூறி கோப்பையை தனலட்சுமி கையில் கொடுத்திருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது எலியும் பூனையுமாக அடித்துக்கொண்டவர்கள் இப்போது இப்படி பாசமழையைக் கொட்டித் தீர்க்கிறார்களே என்று ஆச்சரியப்படவைத்துள்ளது.