பிக்பாஸ் டைட்டில் வின்னர்: 50 சதவிகித வாக்குகள் பெற்று முன்னிலையில் யார்?
பிக்பாஸ் சீசன் 7ன் இறுதிக்கட்டம் இன்று ஒளிபரப்பாகிறது, மற்ற 6 சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் யார் வெற்றியாளர் என்பதை கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் இறுதி நாள் இன்றாகும்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது.
மற்ற சீசன்களோடு ஒப்பிடுகையில் வன்மம் அதிகமாகவே இருந்தது எனலாம், நீயா? நானா? என்ற போட்டியும் அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில் இந்த சீசனில் அர்ச்சனா, மாயா, தினேஷ், மணி சந்திரா மற்றும் விஷ்ணு ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக இருக்கின்றனர்.
கடைசி வாரத்தில் கூட மற்ற போட்டியாளர்களின் வருகையால் வீடே மாறிவிட்டது, ஒருவர் மீது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவது கூட கடைசி நேரத்திலும் தொடர்ந்தது.
இந்நிலையில் யார் வெற்றியாளர்கள் என்பதை அறிய மக்கள் அதீத ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
விஷ்ணு மற்றும் தினேஷ் குறைவான வாக்குகளே பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே மாயா அல்லது அர்ச்சனாவே வெற்றியாளராக வருவார்கள் என சொல்லப்படுகிறது.
மாயா வெற்றியாளர் எனில் தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் எனவும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தகவலின்படி, அர்ச்சனா அதிகளவு வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதாகவும், மக்களின் விருப்பமும் அதுவே என கூறப்படுகிறது.