"என் வெற்றி உனக்கு சமர்ப்பணம்": மகனின் கையில் பிக்பாஸ் கோப்பையை கொடுத்து வெற்றியை கொண்டாடிய அசீம்!
பிக்பாஸ் சீசன் 6 வெற்றியாளரான அசீம் தனது வெற்றியை மகளுடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
பிக்பாஸ் வெற்றியாளர்
பிரபல தொலைக்காட்சியொன்றில் மக்களின் பெரும் வரவேற்றைப் பெற்று ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியானது கடந்த வருடம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் முடிவுபெற்றது.
இதில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் 3 பேர் இறுதிப்போட்டி வரைச் சென்றார்கள். விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய போட்டியாளர்கள் என மூன்று பேர் போட்டியிட்டிருந்தனர்.
இவர் மூவருக்கிடையிலான போட்டியில் ஷிவின் மூன்றாம் இடத்தையும், விக்ரமன் இரண்டாம் இடத்தையும், அசீம் டைட்டில் வின்னராக வெற்றிப்பெற்றிருந்தார்.
மகனுடன் கொண்டாட்டம்
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பல முறை தனது மகன் ரயான் பற்றி பேசியிருப்பார். மேலும், அவருக்காகத்தான் பிக்பாஸ் வீட்டிற்கு தான் வந்ததாகவும் தெரிவித்திருப்பார்.
இந்நிலையில் தற்போது மகனுடன் தனது வெற்றியை கொண்டாடியிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அதில் ரயானின் கையில் பிக்பாஸ் கோப்பையையும், 50 லட்சத்துக்கான காசோலையையும் கொடுத்து மகிழ்ந்த அசீம், அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “எனது உயரம் உனது இலக்கல்ல... நீ உயரனும் என்பதே என் இலக்கு..! இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் என் செல்லமே” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவிற்கு பல பேர் வாழ்த்துக்களையும், லைக்குகளை அள்ளி வழங்கி வருகிறார்கள்.
அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.