பிக்பாஸில் கோப்பையை வென்ற ராஜு யார்? வெற்றி பெற என்ன செய்தார்?
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜு தற்போது மக்களால் கொண்டாடப்படும் பிரபலமாக மாறியுள்ளார்.
தனது நகைச்சவை பேச்சினால் ஒட்டுமொத்த மக்களின் இடம்பிடித்த இவர் திருநெல்வேலியை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.
பிக்பாஸ் வீட்டில் வேலைகளை பல நேரங்களில் தட்டி கழிக்கிறார், டாஸ்க்குகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என விமர்சனங்களை சக போட்டியாளர்கள் பலமுறை இவரை நாமினேட் செய்து வந்தனர்.
ஆனால் இவரது நகைச்சுவை உணர்வுக்காகவும், கோபத்தை கட்டுப்படுத்தி உள்ளே பல பிரச்சனைகளை பொறுமையாக கையாண்டார் என்று நடிகர் கமல் பலமுறை இவரை பாராட்டியதோடு, முதல் ஆளாகவும் அனைத்து நேரங்களிலும் காப்பாற்றப்பட்டார்.
பிரபல ரிவியில் கனா காணும் காலங்களில் அறிமுகமான ராஜு, பின்பு ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி ஆகிய சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றதுடன், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதாநாயகனின் நண்பராக நடித்து ஒட்டுமொத்த மக்களின் மனதில் கத்தியாக வலம்வந்தார்.
பிரபல ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்த இவர், சில படங்களில் துணை கதாபாத்திலும் நடித்துள்ளார்.
பிரபல ரிவி பிரபலங்களான ரியோ, கவின், சிவகார்த்திகேயன் ஆகியோர் இவரது நெருங்கிய நண்பர்களாம். இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராகவும் சில காலம் பணிபுரிந்துள்ள இவரை பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பு அவரே வாழ்த்தி அனுப்பினார்.
ராஜு பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பு நடிகர் பாக்கியராஜை தன் குரு என்றும், படம் இயக்க வேண்டும் என்பதே தன் ஆசை எனவும் கூறியிருந்தார். ராஜு தனது நீண்ட கால நண்பரான தாரிகாவை 2020ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.
பலகுரல் கலைஞராகவும் வலம் வந்த ராஜூ பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னை மக்களிடம் மேலும் நெருக்கமாக கொண்டு போய் சேர்க்கும் எனவும் அதன் மூலம் எனக்கு நல்ல வாய்ப்புகள் நிறைய வரும் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே கலந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதே போன்று ராஜுவின் மனைவியும் எந்தவொரு சுயநலம் இல்லாமல் மிகவும் அமைதியாக இவருக்கு ஏற்ற ஜோடியாக இருப்பதுடன், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து ரசிகர்களின் மனதினை அவரும் கொள்ளை கொண்டது குறிப்பிடத்தக்கது.