வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த முடிவு? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் சமீப நாட்களாக சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்தவர் அமலாபால்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.
முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஏ.எல் விஜய்யும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அமலாபால் செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் ரக்ஷன், புகழ், என விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது.
அமலா பால் கலந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.