கையில் டெலிபோனுடன் சிரிப்பால் மயக்கும் இலங்கை அழகி: ஒரே வீடியோவால் கிரங்கிப் போன ரசிகர்கள்!
ரோசாப்பூக் கலரில் புடவை அணிந்து க்யூட்டான சிரிப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பிக்பாஸ் பிரபலம் ஜனனி. இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் ஜனனி
பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
இதில் இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது. அதன் அஸ்த்திவாராமாக மொபைல் விளம்பரத்தில் நடித்து தனது நடிப்பிற்கு ஆரம்ப புள்ளி வைத்தார்.
பிறகு நடிகர் விஜய்க்கு தங்கையாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
டெலிபோனுடன் வீடியோ
சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் ஜனனி தற்போது வெளியிட்ட வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கையில் டெலிபோனுடன் அழகான ரோசா நிறப்பட்டுப் புடவையில் சில்லறை சிதற சிரித்து ரசிகர்களை பூரிக்க வைத்திருக்கிறார். வர வர ஆளும் அடையாளமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருகிறார்.
இவரின் அனைத்துப் புகைப்படங்களையும் பார்த்து கொள்ளை அழகில் ஜொலிக்கிறீர்கள் என பலரும் தங்களது கமெண்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.