பாடிக் கொண்டிருக்கும் போதே மனைவிக்கு அன்பு முத்தம்! வைரலாகும் யுகேந்திரனின் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய யுகேந்திரன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
உலக ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் வெளியேறியுள்ளனர், 5 பேர் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யுகேந்திரன், இன்ஸ்டாகிராமில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீ ஒரு காதல் கீதம் என்ற பாடலை மனைவியுடன் சேர்ந்து பாடினார்.
அப்போது தன் கணவனை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு கட்டத்தில் மனைவியின் கன்னத்தில் அன்பாக முத்தமிட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மனைவி வெட்கப் புன்னகை சிந்துகிறார், இதை பார்த்த ரசிகர்கள் என்னவொரு காதல் என லைக்ஸ்களை குவிப்பதுடன் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
இவர் பிரபல பாடகரும் நடிகருமான மலேசிய வாசுதேவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |