அடுத்த வார கேப்டஷிங்கிற்காக ஒற்றை காலில் நிற்கும் போட்டியாளர்கள்! கமல் என்ன போகிறார்?
பிக்பாஸ் 7 ல் அடுத்த வாரம் யார் தலைவராக இருப்பது என போட்டியாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எழாவது சீசனை வெற்றிக்கரமாக துவங்கியிருக்கின்றது.
அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் முதலாம் திகதி, 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 5 பேர் வெளியேறிய நிலையில் 5 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இந்த நிலையில் போட்டியாளர்களை விறுவிறுப்பாக வைத்து கொள்வதற்காக நித்தம் ஒரு டாஸ்க் கொடுக்கபட்டு வருகின்றது. இதனால் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
தலைவர் டாஸ்க்
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரு வாரங்களாக பூர்ணிமா ரவி, இந்த நிகழ்ச்சியில் கேப்டனாக இருந்து வருகிறார்.
இதற்கு முன்னைய வாரங்களில் யுகேந்திரன், சரவணன், விஜய் வர்மா ஆகியோர் போட்டியின் கேப்டன்களாக இருந்த நிலையில், இந்த சீசனின் முதல் பெண் கேப்டனாகவும் பூர்ணிமா பார்க்கப்படுகின்றார்.
இந்த வாரம் கேப்டனை போட்டியாளர்கள் தெரிவு செய்துள்ளனர். அதற்காக ஒற்றை காலில் நிற்க வேண்டும் என்ற டாஸ்க் மாயா, கூல் சுரேஷ் உள்ளிட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்க்கில் மாயா கீழே காலை வைக்காமல் வெறித்தனமாக விளையாடுவது போல் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியது.
அத்துடன் அடுத்த வாரத்திற்கான தலைவராக மாயா வந்துவிட்டால் வீடு என்னாகும் என்ற பயத்தில் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |