Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டு தல ஆக இருந்த வினோத், சாண்ட்ராவுடன் சிறைக்கு சென்றுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். இதில் விக்ரம், வினோத் இருவரையும் தவிர மற்ற 11 போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷனில் இருக்கின்றனர்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக வினோத் இருந்து வரும் நிலையில், இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை சரியாக விளையாடாத நபர் என்று சாண்ட்ரா மற்றும் வினோத் இருவரையும் தெரிவு செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தற்போது சிறைக்கு சென்றுள்ள நிலையில், சாண்ட்ரா சிறையில் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார். சாண்ட்ராவின் பேச்சில் வினோத் சிக்கி தவித்து வருகின்றார்.

மேலும் 70 நாட்கள் கடந்தும் தற்போது வரை யார் வெற்றியாளராக வருவார் என்பதை சிறிதும் கணிக்கமுடியாமல் பார்வையாளர்கள் இருக்கின்றனர்.
கம்ருதின், பார்வதி இருவரின் செயல்பாடு எல்லைமீறி செல்வதால், இந்த வாரம் விஜய் சேதுபதி அதனைக் கண்டிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக்பாஸாக இருந்த அமித்
வைல்டு கார்டு போட்டியாளர்களில் ஒருவரான அமித் தனது வாழ்க்கையைக் குறித்து பேசியுள்ளார். இவர் திக்குவாயால் அதிகமாக பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் டப்பிங் செய்துள்ளதாகவும், கன்னட பிக் பாஸ் 2ல் பிக்பாஸாக இருந்தவராகவும் கூறியுள்ளார். அதிகமான விடயங்களை செய்தும் எதுவும் பலனிக்காததால், படிக்க ஆரம்பித்தேன்.
தன்னை அந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டு வந்தது படிப்பு தான் என்று தனது வாழ்க்கையினைக் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |